உம்ரா செய்யும் முறை
உம்ரா செய்வது ஹஜ்ஜை நிறைவேற்றுவது போல் கடமை இல்லாவிட்டாலும் சிறந்ததாகவும் அதிக நன்மை பெற்றுத்தரக் கூடிய காரியமாகவும் இருக்கிறது. ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்.(அல் குர்ஆன் 2:196)
தொழுகை முறை
'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812
உளூவின் சட்டங்கள்
உளூச் செய்யும் போது முதல் செய்ய வேண்டிய செயல் இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுவதாகும். '... 'நீ உளூச் செய்யும் போது இரு முன் கைகளையும் கழுவி தூய்மையாக்கினால் உனது சிறு பாவங்கள் விரல் நுனியிருந்து வெளியேறுகின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி),நூல்: நஸயீ 147)
இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்
மனித வாழ்க்கையில் கனவுகள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. நடக்க முடியாததை ஒருவன் எதிர்பார்க்கும் போது 'பகல் கனவு காணாதே' என்று கூறுவதும், சட்சிகள் இல்லாமல் நடைபெற்ற காரியத்தை பேசும் போது 'ஊமை கண்ட கனவு போல்' என்று உவமை கூறப்படுவதும் கனவுகளின் பாதிப்பை உணர்த்தப் போதுமானதாகும்.
நபிமார்கள் வரலாறு
நபிமார்கள் வரலாறு என்று நாம் எழுதும் இந்தத் தொடருக்கு ஆதாரமாக திருமறையையும் நபி மொழியையும் மாத்திரம் நாம் எடுத்துக் கொண்டதற்காண காரணம்.வரலாறுகளைப் பொருத்தவரை அதிலும் குறிப்பாக நபிமார்கள் வரலாறுகளைப் பொருத்தவரை பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முற்பட்ட வரலாறுகளும் உண்டு சில ஆண்டுகளுக்குற்பட்ட வரலாறுகளும் உண்டு.
வியாழன், 31 மார்ச், 2011
ஏப்ரல் ஃபுல்: ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!
புதன், 30 மார்ச், 2011
புதுவை தேர்தல் நிலைபாடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலப் பொதுக்குழு கூட்டம் காரைக்காலில் இன்று (30-3-11) காலை நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜே பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் புதுவை மாநில அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு புதுவையில் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது உள்ள முக்கிய விசயங்கள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.செவ்வாய், 29 மார்ச், 2011
இஸ்லாத்தின் முகமன் ஸலாம்
ஞாயிறு, 27 மார்ச், 2011
வட்டி வாங்கியவருடன் நட்பு வைத்துக்கொள்ளலாமா?
திமுகவை ஆதரிக்க என்ன காரணம் ?
இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக உறுதி அளித்ததால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தி.மு.க.வுக்கு ஆதரவு என கருணாநிதியை சந்தித்து தெரிவித்தனர்
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக உறுதியளித்துள்ளதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
தி.மு.க.வுக்கு ஆதரவு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் ஜெய்னுலாபுதீன், பொதுச் செயலாளர் ரஹமதுல்லா, செயலாளர் சாதிக் உள்பட நிர்வாகிகள் நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்.
பின்னர் வெளியில் வந்த ஜெய்னுலாபுதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கல்வி, வேலைவாய்ப்பில் அடித்தட்டு முஸ்லிம்கள் முன்னேற வேண்டுமானால் தனி இடஒதுக்கீடு தேவை என்ற அடிப்படையில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆட்சியில் பெற்றோம்.
இடஒதுக்கீட்டை அதிகரிக்க
இது போதுமானதாக இல்லை என்று கருதியதால் இந்த 3.5 சதவீத இடஒதுக்கீட்டை யார் அதிகரித்து தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறுகிறார்களோ அவர்களை ஆதரிப்பது என்ற நிலையில் இருந்தோம்.
அ.தி.மு.க. தலைமை எங்களை 5 முறை தொடர்பு கொண்டு இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவோம் என்றனர். எங்கள் அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடமும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
தி.மு.க. அறிவிப்பு
ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்த இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக அறிவித்திருக்கிறார்கள். அ.தி.மு.க. கூறாமல் சென்றுவிட்டது. தேர்தல் அறிக்கையில் கூறாமல் பிரசாரங்களில் கூறுவதை நாங்கள் உறுதியாக எடுத்துக்கொள்ள முடியாது.
அதன் அடிப்படையில், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கோரிக்கை அடிப்படையில் தி.மு.க.வை ஆதரிப்பது என்று எங்கள் மாநில பொதுக்குழுவில் முடிவெடுத்திருந்தோம். அந்த முடிவினை முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து தெரிவித்தோம். பொதுக்குழுவில் எடுத்த முடிவுப்படி முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு தரவேண்டும் என்றும் நாங்கள் அவரிடம் கூறியிருக்கிறோம்.
இவ்வாறு ஜெய்னுலாபுதீன் கூறினார்.
சனி, 26 மார்ச், 2011
சென்னையில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு – TNTJ வின் தேர்தல் நிலைபாடு
வெள்ளி, 25 மார்ச், 2011
வட்டியும் நமது நிலையும்
வட்டி என்பது நம்முடைய பணம் ஒருவரிடம் எவ்வளவு காலம் இருக்கிறதோ அதற்க்கு ஏற்ப ஆதாயம் தேடுவது. வேறு வார்த்தையில் வட்டியை விளக்குவதாக இருந்தால் நாம் ஒருவருக்கு கொடுக்கும் கடனை திருப்பி வாங்கும்போது அவர் எத்தனை காலம் நம் பணத்தை அவர் வைத்திருக்கிறார் என்பததை கணக்கிட்டு அதற்க்கு தனியாக வசூளிப்பதே வட்டியாகும்.நம்முடைய பணம் ஒரு குறிப்பிட்ட காலம் ஒருவரிடம் இருக்கிறது என்பதற்காக அவரிடமிருந்து ஒரு தொகையை தனியாக வசூலிப்பது நிச்சயமாக அநியாயமாகும்.ஒருவனுடைய ஏழ்மையையும் பணத்தாசையையும், கஷ்டமான நேரத்தை பயன்படுத்தி அவனுக்கு ஒரு தொகையை கொடுத்து அவன் எவ்வளவு காலம் கடன் பட்டு இருக்கிறானோ அந்த காலத்திற்கு ஏற்ப ஒரு தனி தொகையை வசூலிப்பதில் எந்த ஒரு ஞாயமும் இல்லை. இந்த அடிப்படையில் இஸ்லாம் வட்டியை முழுமையாக தடுக்கிறது.ஆனால் இன்றைய சூழ்நிலையில், அண்டா குண்டாவில் ஆரம்பித்து நகை, வாகனம்,வீடு கடைசியில் நாட்டையே அடகு வைத்து விடுகிற அளவிற்கு வட்டி எங்கும் பெருகி இருக்கிறது.வட்டிக்கும் வியாபாரத்திற்கும் உள்ள வேறுபாடு
பலர் வட்டிக்கும் வியாபாரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறியாமல் இருக்கிறார்கள்.வியாபாரம் என்பது உற்பத்தியில் ஆரம்பித்து உபயோகிப்பாளர் கையில் கிடைக்கும் வரை நடைபெரும் பரிமாற்றமே ஆகும்.வியாபாரத்திற்கும் வட்டிக்கும் இரண்டு பெரிய வித்தியாசம் உள்ளது .வியாபாரத்தில் லாபமும் ஏற்படும் நஷ்டமும் ஏற்படும் ஆனால் வட்டியில் நஷ்டம் ஏற்படவே செய்யாது.வியாபாரத்தில் ஏற்படும் உறவு ஒரு பொருளோ பணமோ அந்த பரிமாற்றத்துடன் முடிந்து விடும் ஆனால் வட்டி என்பது ஒருவர் தான் பட்ட கடனை திருப்பித் தரும் காலம் வரை தொடரும்.
2:275 الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ فَمَن جَاءَهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىٰ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ ۖ وَمَنْ عَادَ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ
யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.(அல்குர்ஆன் 2:275)
இஸ்லாத்தின் பார்வையில் வட்டி
வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.எந்த குற்றத்திற்கும் இல்லாத அளவிற்கு வட்டியை, அல்லாஹ்வுடன் போர் செய்யும் ஒரு காரியமாக அல்லாஹ் தன் திருமறையிலே மனிதர்களுக்கு எச்சரிக்கிறான்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
வட்டியை பெரும் பாவங்களின் பட்டியலில் இஸ்லாம் வைக்கிறது.வட்டி பெரும் பாவம் என்று அறிந்தே மக்கள் சர்வ சாதாரணமாக சிறிதும் பயமில்லாமல் வெளிப்படையாக வட்டி வாங்குவதை பார்க்க முடிகிறது.பெரும்பாலான மக்கள் வட்டி வாங்குவதால் ,வட்டி இஸ்லாத்தில் தடுக்கப் படவே இல்லை அல்லது இஸ்லாம் வட்டியைப் பற்றி பேசவே இல்லை என்பதைப் போல் தோற்றம் உண்டாக்கி விட்டனர்.பெற்றோர்கள் வட்டி வாங்கக் கூடியவர்களாக இருக்கும்போது அவர்களுடைய குழந்தைகளுக்கு வட்டி தவறு என்று எப்படி சொல்வார்கள்?பெரும்பாலான மக்கள் செய்வதால் இஸ்லாத்தில் வட்டி அனுமதிக்கப் பட்டதாக ஆகாது என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள், 'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதும்ட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)' என்று கூறினார்கள்.
புஹாரி 6857
வட்டியில் அல்லஹ்வின் அருள் இல்லை
வட்டியினால் வந்த செல்வதில் அல்லாஹ்வின் அருள் இருக்காது என்பதை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு நமக்கு எச்சரிக்கின்றார்கள்.
2:276 يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் 2:276)
30:39 وَمَا آتَيْتُم مِّن رِّبًا لِّيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِندَ اللَّهِ ۖ وَمَا آتَيْتُم مِّن زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُضْعِفُونَ
(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.(அல்குர்ஆன் 30:39)
வட்டி மறுமையின் நிலை
மறுமையில் வெற்றி பெறுவதே ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கமாக இரக்க வேண்டும் .வட்டி வாங்கியவர்கள் மறுமையில் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்று திருக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களின் போதனைகளும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
4:161 وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ ۚ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا
வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.(அல்குர்ஆன் 4:161)
"இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்!
"அவர் யார்?' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!" எனக் கூறினார்கள்."
புஹாரி 2085
வட்டி சாபத்திற்கு உரியது
வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (3258)
பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஜுஹைஃபா(ரலி)
புஹாரி 5347
மற்ற மனிதர்களின் சபிப்பதர்க்கும் நபிமார்கள் சபிப்பதர்க்கும் வேறுபாடு உண்டு.நபிமார்கள் ஒரு விஷயத்தை மார்க்கம் என்று கூறினால் அது அல்லாஹ்வின் புறத்தே வருகிறது என்று தான் அர்த்தம்.அதே போல் ஒரு செயலை நபிமார்கள் சாபமிட்டால் அதை அல்லாஹ் சபிக்கிறான் என்று தான் புரிந்துக் கொள்ள வேண்டும்.வட்டி சாபத்திற்கு உரியது என்பதை மேலுள்ள ஹதீஸிலிருந்து நாம் விளங்க முடிகிறது.
ஃபிரான்சும் வட்டி கலாச்சாரமும்
உலகில் உள்ள பல நாடுகள் வட்டியை மையமாக கொண்டே இயங்கி வருகின்றது.அதில் பிரான்ஸ் நாடு ஒரு முக்கிய இடத்தை பிடிக்கிறது.நாம் கடையில் வாங்கும் சிறு பொருள் முதல் நாம் வாங்கும் வீடு போன்றவைகள் வரை இந்த நாட்டில் வட்டி எங்கும் நிறைந்திருக்கிறது.வட்டி வாங்குவது இஸ்லாத்தில் ஹராம் என்று வைத்திருந்தும் தங்களின் பணத்தை பெருக்கிக் கொள்வதர்காகவும் சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காகவும் பலர் வட்டி விழுந்து விடுகின்றனர்.வட்டி வாங்காமல் இந்த நாட்டில் வாழவே முடியாது ஆகையால் நிர்பந்தத்தின் அடிப்படையில் வட்டி வாங்கிக் கொள்ளலாம் என்று சில இஸ்லாமிய மார்க்கக அறிஞர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளக் கூடியவர்கள் பத்வாவும் கொடுத்திருக்கின்றனர்.நாம் ஒரு செயயலை செய்யா விட்டால் உயிர் வாழவே முடியாது போன்ற நிலை ஏற்பட்டால் அதை நிர்பந்தம் என்று கூறலாம்.இவர்கள் வட்டி வாங்குவதை நிர்பந்தம் என்று கூறுவது எந்த வகையிலும் நியாயம் ஆகாது.இவர்கள் எந்த காரணத்தை வைத்து வட்டி நிர்பந்தம் என்று கூறுகிறார்கள் என்பதையும் அதற்க்கு என்ன தீர்வு என்பதையும் பார்போம்.
பிரான்ஸ் நாட்டில் வட்டியை வாங்குவதயும் கொடுப்பதயும் முக்கியமான நான்கு காரணங்களாக பிரிக்கலாம்
பொருட்களை தவணை முறையில் வாங்கும்போதுள்ள வட்டி
விலை அதிகமான பொருட்களை அதிகமானோர் வாங்க முன்வர மாட்டார்கள் என்பதற்காக தவணை முறையில் சிறிய தொகையை மாதா மாதம் கட்ட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொருட்கள் விற்கப் படுகிறது.இந்த முறையே இன்ஸ்டால்மென்ட்(Installment) என்று அழைக்கப் படுகிறது.ஒரு பொருளை முழு தொகைக் கொடுத்து வாங்கும்போதும் இன்ஸ்டால்மென்டில் வாங்கும்போதும் அதன் தொகை மாறாமல் இருந்தால் எந்த குழப்பமும் இல்லை அதை இஸ்லாம் தடுக்க வில்லை.ஆனால் நீங்கள் தவணை முறையில் கொடுக்கும் தொகையை கூட்டி பார்த்தல் அந்த பொருளின் முழுத் தொகையின் மதிப்பை விட அதிகமாக இருக்கும்.ஒரு பொருள் நம்மிடம் குறிப்பிட்ட காலம் இருப்பதற்காக ஒரு தொகையை தனியாக செலுத்துவது வட்டியின்றி வேறில்லை.இதற்க்கு இரண்டு தீர்வுகள் உள்ளன :
- முழு தொகையை கொடுத்து அந்த பொருளை வாங்குதல் .
- சில நேரங்களில்,தவணை முறையில் செலுத்தும் தொகையும் தவணை இல்லாமல் செலுத்தப்படும் முழு தொகையும் சமமாக இருக்கும்(sans frais).அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு நாம் வட்டியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
வங்கிகளிலிருந்து பெறப்படும் வட்டி
ஒருவருடைய வங்கிக கணக்கின் தொகையை பொருத்தும் அந்த தொகை எவ்வளவு காலம் அந்த வங்கியின் கணக்கில் இருக்கிறது என்பதை பொருத்தும் ஒரு கணிசமான தொகை அந்த வங்கியில் உள்ள நம்முடைய தொகையோடு சேர்க்கப் படுகிறது,இந்த தொகையானது வட்டிதான் என்பதற்கு விளக்கம் தேவை இல்லை.வட்டியை மூலதனமாக கொண்டு இயங்கும் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் முக்கியமாக இரண்டு காரணங்களுக்காக இதை விரும்புகிறார்கள்.
செல்வத்தை பெருக்கிக் கொள்வதற்காக : வங்கியில் பணம் இருந்தால் அதிலிருந்து வட்டி வரும் அதன் மூலம் நம் செல்வத்தை பெருக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பலர் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.இப்படி பெறப்படும் செல்வம் வட்டி தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இவர்கள் அல்லாஹ்வுடைய கடும் தண்டனையையும் நரக நெருப்பையும் அஞ்சிக் கொள்ள வேண்டும்.நம்மை சுற்றி இருக்கின்ற பல மக்கள் இந்த பாவத்தை செய்து கொண்டு இருக்கின்றனர் என்பது தான் பரிதாபத்திற்குரிய நிலை.
பாதுகாப்பு : வீட்டில் பணம் வைத்திருப்பதை விட வங்கியில் பாதுகாப்பாக இருக்கும் என்ற காரணத்தினால் பலர் வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றனர்.இந்த காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம் தான்.ஆனால் இதன் மூலம் வரும் வட்டியை என்ன செய்வது ? என்ற கேள்வி எழுகிறது.சிலர் அந்த வட்டி தொகையை எடுத்து வேறு யாருக்காவது(ஏழைகளுக்கு) கொடுத்து விடலாம் என்றும் சிலர் அந்த தொகையை அந்த வங்கியிலேயே விட்டு விடுவது நல்லது என்று இரண்டு தீர்வுகள் நமக்கு முன்வைக்கப் படுகிறது.இதில் இரண்டாவது தீர்வே சிறந்தது.ஏனெனில் அந்த வட்டி பணம் நம்முடைய பணம் இல்லை என்ற போது அதை நம்மால் எப்படி நம் இஷ்டம் போல் அதை பயன் படுத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது.
வாகனம் வாங்குவதில் வட்டி
வாகனம் வாங்குவதற்கு பெரிய தொகை தேவை என்பதாலும் முழுத் தொகையை செலுத்தினால் வருமான வரி(Income Tax) போன்ற சிக்கல் இருப்பதால் அதிகமானோர் தவணை முறையிலேயே வாகனம் வாங்குகின்றனர்.இந்த தவணை முறை என்பது வட்டி தான் என்பதை ஏற்கனவே நாம் விளக்கி விட்டோம்.இந்த பிரச்சனைக்கும் இரண்டு தீர்வுகளை முன்வைக்கலாம் :
- பயன்படுத்திய வாகனத்தை வாங்கினால் அதன் விலை குறைவாக இருக்கும்.அந்த வகையில் முழுத் தொகையை செலுத்தி அந்த வாகனத்தை வாங்கிக் கொள்ளலாம்.
- வட்டி செலுத்தி தான் வாகனம் வாங்க வேண்டும் என்று இருந்தால் வாகனமே தேவை இல்லை என்ற மனநிலைக்கு வந்து விட வேண்டியதுதான்.வாகனம் இல்லாமல் வாழவே முடியாது என்று எவராலும் கூற முடியாது.அவர்களுடைய ஆசையையும் சொந்த வாகனம் இருந்தால் உள்ள சவுகரியத்தையும் அல்லாஹ்வுக்காக தியாகம் செய்தால் உலகிலோ மருமையிலோ இதை விட சிறந்ததை அல்லாஹ் நமக்கு கொடுப்பான் என்று நம்புவதுதான் நமது ஈமானை பாதுகாக்கும் முறையாகும்.
வீடு வாங்குவதில் வட்டி
வாகனத்திற்கு நாம் கூறியது வீடு வாங்குவதிர்க்கும் பொருந்தும்.வட்டி இல்லாமல் நமக்கு சொந்த வீடு வாங்க முடியவில்லை என்றால் வாடகை வீட்டை தேர்ந்தெடுப்பது தான் நமது ஈமானை காப்பாற்றும் வழி முறையாகும்.நம்முடைய சொகுசான வாழ்விற்காக இஸ்லாத்தை மறந்து வட்டி கொடுத்து வீடு வாங்குவோர் சற்று ஃபிரவ்னுடைய மனைவி கூறியதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் "இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! (அல் குர் ஆன் 66:11)
ஏலசீட்டில் இரண்டு முறைகள் உள்ளது.முதலாவது மாதா மாதம் ஆளுக்கு ஒரு தொகை உதாரணமாக 100€ கட்டுவார்கள் பின்பு பணத்தேவை அல்லது குலுக்கலில் வெற்றி பெற்றவருக்கு மொத்த தொகையில்(1000€ ல்) கழிப்பு போக அதாவது வட்டி போக மீதம் உள்ளதை (900€) கொடுப்பார்கள் , இதில் கழிப்பு தொகையை (100€)என்பதுதான் அதை நடத்துபவரின் லாபமாகும் ,அவர் வட்டி வாங்குகிறார் மற்றவர்கள் வட்டி கொடுக்கிறார்கள் இரண்டும் நரகத்திற்கு இழுத்துச்செல்லும் நேரடியான வட்டியாகும்.எனவே இதில் கலந்துக் கொள்ளக் கூடாது.
ஒரு சிலர் கூட்டாக சேர்ந்து கழிப்பு ஏதும் இல்லாமல் எந்த ஆதாயம் இல்லாமலும் செய்கிறார்கள் இதில் எதுவும் தவறில்லை.
வட்டியினால் ஏற்படும் விளைவுகள்
நம்முடைய தேவைக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக பலர் வட்டிக்கு பணம் வாங்குகின்றனர்.வட்டிக்கு பணம் கொடுக்கக் கூடியவர்கள் கடன் கொடுக்கும்போது சிரித்த முகத்தோடும் நட்போடும் பழகுவார்கள்.அந்த பணத்தை திருப்பி கொடுக்க தாமதமானலோ அல்லது தொகையை குறைத்து கொடுத்தாலோ அவர்களுடைய சுய ரூபம் வெளிப்படுவதை காண்கிறோம்.இவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கினால் ரவுடிகளை வைத்து மிரட்டுவது,அசிங்கமான வார்த்தைகளை கொண்டு கொச்சைப் படுத்துவது போன்ற இன்னல்களுக்கு ஆளாக வேண்டி வரும்.வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம்.அதுமட்டுமா கடன்காரர்களால் தம் மனைவியின் கற்பை இழந்த கதையும் சமீபத்தில் நடந்தேறியது.இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒரு தீய செயலை செய்தால் இப்படிப்பட்ட கேவலங்களுக்கும் அசிங்கங்களுக்கும் ஆளாக வேண்டி வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.வட்டியினால் உலகிலும் கெடும் மறுமையிலும் கேடு என்பதை மக்கள் என்று உணரப் போகிறார்களோ?
நாட்டுக்கும் கேடு : ஒருவன் தொழில் தொடங்கும்போது தன் சொந்த செலவில் அந்த தொழிலை துவக்கினால் அவன் உற்பத்தி செய்யும் பொருளில் கணிசமான லாபத்தை வைத்து விற்கப்படும்.ஆனால் வட்டிக்கு கடன் வாங்கி ஒரு தொழிலை ஆரம்பித்தால் உற்பத்தி செய்யும் பொருளில் லாபம் மட்டும் இல்லாமல் அவன் கொடுக்க வேண்டிய வட்டித் தொகையையும் சேர்த்துதான் அந்த பொருளை விற்க வேண்டிய சூழ்நிலையில் அவன் தள்ளப் படுவான்.அந்த வியாபாரி செலுத்த வேண்டிய வட்டிப் பணத்தை அந்த பொருளை வாங்குபவர்கள் மீது திணிக்கப் படுகிறது.இப்படி வட்டிக்கு வங்கி தொழில் செய்வதால்தான் விலை வாசி அதிகரிக்கிறது.
இந்தியா போன்ற நாடுகள் உலக வங்கியில் வட்டிக்கு கடன் வாங்கி இப்போது நாட்டில் வரும் வருமானத்தில் கால்வாசிக்குமேல் உலக வங்கியில் பெற்ற கனுக்காக வட்டி தொகையை செலுத்தி வருகிறது.வட்டிக்கே இந்த நிலைமை என்றால் அசலை எப்போது கொடுப்பது?சமீபத்தில் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கும் வட்டி தான் மூலக் காரணம்.பல வங்கிகள் இழுத்து மூடப்பட்டன,இதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்த நிலையையும் நாம் பார்த்தோம்.இதெல்லாம் நடந்தும் கூட உலக நாடுகள் திருந்துவதாக தெரியவில்லை.
வட்டிக்கு என்ன தீர்வு?
மரணத்திற்கு முன் மனிதன் செய்யும் தவறை அவன் திருந்தி பாவமன்னிப்பு கேட்டால் அதை மன்னிக்க அல்லாஹ் தயாராக இருக்கிறான் என்பது இஸ்லாத்தின் அடிப்படை .வட்டி வாங்கக் கூடியவர்கள் அவர்கள் செய்த தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு எஞ்சியுள்ள வட்டியை வாங்காமால் விட்டுவிட்டால் அவர்கள் வெற்றி அடைவார்கள் என்று அல்லாஹ் தன திருமறையிலே கூறுகிறான்.எனவே என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே அல்லாஹ் தடுத்துள்ள இந்த வட்டியை விட்டு விட்டு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு இனியாவது நரக நெருப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
2:278 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.(அல்குர்ஆன் 2:278)
3:130 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.(அல்குர்ஆன் 3:130)
இஸ்லாத்தை ஏற்ற நேபாள நடிகை பூஜா லாமா ! அல்ஹம்துலில்லாஹ்
புதன், 23 மார்ச், 2011
மரங்கொத்தியின் வடிவமைப்பு
எவ்வித பாதிப்பும் ஏற்படாதற்கு காரணம் மரங்கொத்தியின் தலை அத்தகைய செயலுக்கென்றே படைக்கப்பட்டுள்ளதாகும். மரத்தை கொத்தும் போது மரங்கொத்தியின் மண்டை ஓட்டில் ஏற்படும் சக்தியை தடுக்கக்கூடிய அமைப்பு காணப்படுகிறது. அதன் முன்னெற்றி மற்றும் சில மண்டை ஓட்டு தசைகளும் அதன் அலகோடு இணைக்கப்பட்டுள்ளதுடன் தாடை இணைப்பும் மிக நன்றாக செயல்பட கூடியவை. அதன் காரணமாக அது துளையிடும் போது ஏற்படும் சக்தியை குறைக்க உதவுகிறது.
மரங்கொத்தியின் வடிவமைப்பும் திட்டமிடலும் இத்துடன் முடிவடைவதில்லை. அவை பைன் மரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுடன் துளையிடுவதற்கு முன்னால் மரத்தின் வயதை ஆராய்கின்றன. அவை 100 வயதை தாண்டிய பைன் மரங்களையே தேர்ந்தெடுக்கின்றன. ஏனெனில் 100 வயதை தாண்டிய மரங்களில் நோய் ஏற்பட்டு அதன் கடினமான மேல் பட்டை மிருதுவாகிறது. இந்த உண்மையை விஞ்ஞானம் சமீபத்தில் தான் கண்டுபிடித்தது. இந்த உண்மையை உங்கள் வாழ்நாளிலேயே முதல் முறையாக தற்போது தான் படித்து தெரிந்துகொள்கீறீர்கள் ஆனால் மரங்கொத்திகளுக்கு பல நூற்றாண்டுகளாக இந்த உண்மை தெரியும்.
மரங்கொத்தி பறவை பைன் மரங்களை தெரிவு செய்வதற்கு இது ஒன்று மட்டும் காரணமல்ல. மரங்கொத்திகள் அதன் கூட்டை சுற்றி துளையிடுகிறது. இந்த செயல் பல காலமாக புதிராக இருந்தது. இந்த துளைகள் அவற்றை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல காலமாக பைன் மரத்திலிருந்து வடியும் ஒருவகை கடினமான திரவம் இந்த துளைகளில் தேங்கி காணப்படுகிறது. மரங்கொத்தி பறவையின் கூட்டின் வெளிப்பகுதி கடினமான திரவத்தினால் நிரம்பி இருப்பதால் அவைகள் அவற்றின் பெரும் எதிரியான பாம்பிலிருந்து பாதுகாப்பு பெறுகின்றன.
அதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் மரத்தில் காணப்படும் எறுப்பு கூட்டினுள் செல்லும் அளவிற்கு அதன் நாக்கு சிறிதாக காணப்படுகின்றன. அதன் நாக்கில் ஒட்டுந்தன்மையாக காணப்படுவதால் அங்கு வாழும் எறும்புகளை இலகுவாக பெற்று கொள்கின்றன. அதன் நாக்கின் அமைப்பு எறும்பின் உடலில் காணப்படும் அசிட் பாதிப்பிலிருந்து அவற்றை காப்பாற்றுகிறது என்ற உண்மை அதன் படைப்பில் காணப்படும் முழுமையை தெளிவாகிறது.
மரங்கொத்தி பறவையின் தனித்துவமான பண்புகளை ஆராய்ந்தோம். அவற்றின் தனித்துவமான அமைப்புகள் ஆராயும் போது அவை தனித்துவமாக படைக்கப்பட்டவை என்பது நிரூபணமாகிறது. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் அடிப்படையில் மரங்கொத்தி பறவைகள் தற்செயலாக பரிணாமம் அடைந்தது என்று கூறுவதாயின் அவற்றின் இத்தகைய விசித்தரமான பண்புகளை பெற்று கொள்ள முன்பே அந்த இனம் அழிந்து போயிருக்கும். இருப்பினும் அவற்றின் வாழ்வோடு ஏற்ற வகையில் அவைகளை அல்லாஹ் படைத்திருப்பதால் அவைகள் அதன் வாழ்வை அனைத்து அத்தியவசிய பண்புகளோடும் ஆரம்பித்திருக்கின்றன.
தவ்ஹீத் சகோதரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ABCD (SDPI PFI etc..) ரவுடி கும்பல்
அவசரப் பொதுக்குழு அறிவிப்பு – இன்ஷா அல்லாஹ் சென்னையில் மார்ச் 26 ல் !
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
செவ்வாய், 22 மார்ச், 2011
சவுதி அரேபியாவில் அரசியல் கட்சி உதயம் – அரசாட்சிக்கு வேட்டு வைக்கும் புதிய முயற்சியா?
முஸ்லீம்களின் முக்கிய வணக்கத் தளங்களான மக்கா, மதினா போன்ற சிறப்பு மிக நகரங்களை உள்ளடக்கிய நாடாக இருக்கும் சவுதி பல காலமாக மன்னர்களினால் ஆட்சி செய்யப்படுகிறது.
சவுதியின் தற்போதைய மன்னர் அப்துல்லாஹ்வின் பாட்டனான அப்துல்லாஹ் பின் சுஊத் அவா்களின் பெயரின் அமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த சவுதி அரேபியா.
தவ்ஹீதுக்கு ஓரளவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளில் ஒன்றாக திகழும் சவுதி அரேபியாவில் தற்போது பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கு மற்றும், ஆபிரிக்க முஸ்லீம் நாடுகளில் ஏற்பட்டு வரும் அரசியல் போராட்டங்களின் தாக்கம் சவுதியின் கதவுகளையும் தட்ட ஆரம்பித்திருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஏன் என்றால் டியுனிஷியா மற்றும் எகிப்தின் ஆட்சியாளர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டவுடன் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க மன்னர்கள் மற்றும் அடக்கு முறை ஆட்சியாளர்கள் பலர் சிலாகித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.
குவைத் மன்னர் பலவிதமான திட்டங்களை அதிரடியாக அறிவித்துள்ளார்.
சவுதி மன்னரோ பல இலவச திட்டங்களையும், மானிய முறைகளையும் அறிமுகம் செய்துள்ளார். இதே போல் பல நாடுகள் ஆட்சி முறையிலேயே மாற்றங்களை செய்துள்ளார்கள்.
இராணுவ ஆட்சியாளர்களாக இருந்த, தற்போது இருக்கும் பலர் அரசியல் ரீதியில் பிரதமர்களை நியமித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
இப்படி பல ஆட்சியாளர்கள் அண்மைய அரசியல் புரடசிகளினால் அடி அசைந்து போய் உள்ளதை நாம் காண முடிகிறது.
சவுதியில் முதன் முறையாக ஓர் அரசியல் கட்சி உதயம்.
இது வரை காலமும் மன்னர் ஆட்சியின் மூலம் மாத்திரம் மக்கள் பிரச்சினையை தீர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்த சவுதியல் தற்போது மாற்றம் நிகழ ஆரம்பித்திருக்கிறது.
ஆம் தற்போது அங்கு ஓர் அரசியல் கட்சி உருவெடுத்துள்ளது. ஹிஸ்புல் உம்மா அல் இஸ்லாமிய்யாஹ் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தக் கட்சியில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கல்விமான்கள், வர்த்தகப் பிரமுகர்கள் என்று பலரும் அங்கம் வகித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தச் செய்தியை ஏ.எப்.பி சர்வதேச செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மன்னர் குடும்பம் மாத்திரம் இந்த நாட்டை ஆட்சி செய்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தத் தகவல்களை அதிகாரிகளிடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று ஹிஸ்புல் உம்மா கட்சியின் நிறுவனர்களின் ஒருவரான சட்டத்தரணி அப்துல் அஸீஸ் வஹ்ஹாபி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற ஆட்சி அதிகாரம் அற்ற சவுதியில் அரசியல் கட்சியொன்றின் உதயம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வைத் தூண்டியுள்ளது.
இதுவரை சவுதியில் பாராளுமன்ற நடை முறைக்குப் பதிலாக சூரா என்ற அரசியல் ஆலோசனைச் சபையே இருந்து வருகிறது. அதிலும் அந்த ஆலோசகர்கள் மன்னரினாலேயே தேர்வு செய்யப்படுகிறார்கள். மன்னர் தனக்கு விரும்பியவர்களை அதில் இணைக்கவும், பிடிக்காதவர்களை அதிலிருந்து நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளார்.
இந்த சூரா சபை தொடர்பான பல விமர்சனங்களில் ஒன்று சூராவில் அங்கம் வகிப்பவர்களில் அதிகமானவர்கள் மன்னரின் குடும்ப உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் மாத்திரம் என்பதுதான்.
இந்த சூரா சபைக்கு மாற்றமான பாராளுமன்ற ஆட்சி முறையை சவுதியில் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த கட்சியின் நோக்கமாக இருக்கிறது.
அரசியல் கட்சிகளின் உருவாக்கத்திற்கு சவுதியில் அனுமதி உண்டா?
மன்னர் ஆட்சி நடக்கும் சவுதியில் அரசியல் கட்சிகளின் உருவாக்கத்திற்கு அனுமதியுண்டா என்ற கேள்வி தற்போது சர்வதேச சமூகத்தில் ஒரு விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் சவுதியின் ஜனநாயக மனித உரிமைகள் செயல்பாட்டாளரான முஹம்மது அல் கஹ்தானி அவா்கள் சவுதியில் அரசியல் கட்சிகளை மக்கள் உருவாக்குவதற்கான அங்கீகாரம் அரசியல் ரீதியாக இருக்கத் தான் செய்கிறது. மேலும் சவுதியில் அரசியல் கட்சிகள் உருவாக்கப்பட்டால் அதனை அங்கீகரிக்க வேண்டும் என்று சவுதி அரேபியா சர்வதேச ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.அதனால் தாராளமாக அரசியல் கட்சியை ஆரம்பிக்க முடியும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
எகிப்து மற்றும் டியுனிஷியாவில் ஏற்பட்ட புரட்சியினால் தான் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அப்துல் அஸீஸ் வஹ்ஹாபி அவா்கள் இந்தப் புரட்சிகளுக்கு முன்பே சவுதியில் ஜனநாயக முறையிலான அரசியல் கட்சியின் உருவாக்கத்திற்கான தேவை உணரப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார்.
எகிப்து மற்றும் டியுனிஷியாவின் நிலை சவுதிக்கும் நிகழுமா?
அடக்கு முறை ஆட்சிகளுக்கு எதிராக அரபு நாடுகளில் ஏற்பட்டு வரும் ஆட்சி மாற்றத்திற்கான போராட்டம் சவுதியிலும் ஏற்படுமா என்ற கேள்வி சர்வதேச சமூகத்தின் முன் தற்போது வைக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் இரண்டு சிறிய ஆர்ப்பாட்டங்கள் சவுதியில் நிகழ்ந்து முடிந்துள்ள நிலையில் இந்தக் கேள்வி ஒரு முக்கியத்துவம் மிக்கதாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
ஜித்தாவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பலர் பாதிக்கப்பட்டார்கள். நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைபாட்டினால் தான் வெள்ள நீர் வடிந்தோடுவதில் சிக்கள் ஏற்பட்டது என்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அவசரமாக செய்யப்பட வேண்டும் என்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி நடந்துள்ளதாகவும் அதற்கும் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புருத்தி ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதே போல் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் உள் நாட்டு அமைச்சினால் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி இன்னுமொரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஹிஸ்புல் உம்மா அரசியல் கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போகும் சந்தர்ப்பத்தில் போராட்டத்திற்கான வாசல்கள் திறக்கப்படுவதற்கு வழியேற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
திங்கள், 21 மார்ச், 2011
ஃபிரான்ஸில் TNTJ கிளை உதயம்!! TNTJ.NET இல் வெளியான செய்தி
பதவிக்காக இணைவைக்கவும் தயார் !!
ஞாயிறு, 20 மார்ச், 2011
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் தேர்வு
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) தலைவர் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிர்வாக அமைப்பு குறித்தும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.எண்ணிக்கை முக்கியமில்லை என்றும் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் இருந்தால் இந்த கொள்கை பிடிப்புள்ள சிறிய கூட்டம் இன்ஷா அல்லாஹ் இறைவனின் உதவியால் பின்பு பெரும்கூட்டமாக மாறும் என்றும் குறிப்பிட்டார்.மேலும் பல நிர்வாக ஆலோசனைகளும் கூறி இணையம் மூலம் நேரடியாக உரையாற்றினார்கள்.
நிகழ்வுகள்
1) TNTJ தலைமை நிர்வாகிகள்(பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் சையது இப்ராஹீம் ) முன்னிலையில் நமது FRTJ நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.தேர்வான நிர்வாகிகளின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
2) நிர்வாக சம்பந்தமான சந்தேகங்களுக்கும் ,உறுப்பினர்கள் சம்பந்தமாகவும் பல ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
3) நேரடி இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ,மாற்று மதத்தினருக்கான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப் பட்டது.
4) WWW.FRTJ.NET இணையதளத்திற்கு அனுமதி பெறப்பட்டது.
5) நேரடி நிர்வாகிகள் தேர்வு நல்லவிதமாக முடிந்ததுடன் நிர்வாகிகள் மற்றும் கருத்து கேட்பு நிகழ்சிகள் மற்றும் ஆலோசனைகள் கூட்டம் நடந்தது இதில் நிர்வாகம்,தாவா மற்றும் சமுதாயப் பணிகள்,செயல்பாடுகள் ,மற்றும் WWW.FRTJ.NET இணையத்தளம் போன்ற பல விஷயங்கள் விவாதித்து அனைத்திற்க்கும் தீர்வு காணப்பட்டது.
மேலும் பல நல்ல அம்சங்களை முன் வைத்து நடந்த இந்த செயற்குழு அமர்வு, இறை மார்க்கத்தை அதன் தூய வடிவில் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியில் தம்மால் இயன்ற ஒத்துழைப்புகளையும், உதவிகளையும் அனைவரும் நல்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டு கூட்டம் நிறைவுற்றது.
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் விபரம்:
மண்டலத் தலைவர் : காதர் முஹைய்யதீன்(அதீன்)
மண்டல துணை தலைவர் : அப்துல் ஹக்கீம்
மண்டல செயலாளர் : முஹம்மது இன்சாப்
துணைச்செயலாளர் : முஹம்மது ருக்னுதீன்
மண்டல பொருளாளர் : ஃபஸ்ருல் ஹக்
தொடர்புக்கு :


















