இந்த வார கேள்வி : நோயாளிகள்,பயணிகள் நோன்பை விட்டால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ? பதில் அளிக்க

உம்ரா செய்யும் முறை


உம்ரா செய்வது ஹஜ்ஜை நிறைவேற்றுவது போல் கடமை இல்லாவிட்டாலும் சிறந்ததாகவும் அதிக நன்மை பெற்றுத்தரக் கூடிய காரியமாகவும் இருக்கிறது. ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்.(அல் குர்ஆன் 2:196)

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

உளூவின் சட்டங்கள்


உளூச் செய்யும் போது முதல் செய்ய வேண்டிய செயல் இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுவதாகும். '... 'நீ உளூச் செய்யும் போது இரு முன் கைகளையும் கழுவி தூய்மையாக்கினால் உனது சிறு பாவங்கள் விரல் நுனியிருந்து வெளியேறுகின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி),நூல்: நஸயீ 147)

இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்


மனித வாழ்க்கையில் கனவுகள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. நடக்க முடியாததை ஒருவன் எதிர்பார்க்கும் போது 'பகல் கனவு காணாதே' என்று கூறுவதும், சட்சிகள் இல்லாமல் நடைபெற்ற காரியத்தை பேசும் போது 'ஊமை கண்ட கனவு போல்' என்று உவமை கூறப்படுவதும் கனவுகளின் பாதிப்பை உணர்த்தப் போதுமானதாகும்.

நபிமார்கள் வரலாறு


நபிமார்கள் வரலாறு என்று நாம் எழுதும் இந்தத் தொடருக்கு ஆதாரமாக திருமறையையும் நபி மொழியையும் மாத்திரம் நாம் எடுத்துக் கொண்டதற்காண காரணம்.வரலாறுகளைப் பொருத்தவரை அதிலும் குறிப்பாக நபிமார்கள் வரலாறுகளைப் பொருத்தவரை பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முற்பட்ட வரலாறுகளும் உண்டு சில ஆண்டுகளுக்குற்பட்ட வரலாறுகளும் உண்டு.

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

பிறரிடம் யாசிக்காமல் தன்மானத்துடன் வாழ்வோம்

நம்மில் சிலர் எதற்கெடுத்தாலும் மற்றவரிடம் உதவி கேட்பதும்,ஒரு தேவை என்றால் மாற்று வழியை யோசிக்காமல் உடனடியாக அடுத்தவரிடம் யாசிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.இப்படிப்பட்டவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.

முகீரா இப்னு ஷுஅபா(ரலி)யின் எழுத்தர் (வர்ராது) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட ஒன்றை எனக்கு எழுதுங்கள்" என முஆவியா(ரலி) முகீரா(ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு முகீரா(ரலி) 'நிச்சயமாக அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான்; இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார் (என ஆதாரமின்றிப் பேசுவது). பொருள்களை வீணாக்குவதும் அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதும்!" என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன் என பதில் எழுதினார்.(புஹாரி 1477)