இந்த வார கேள்வி : நோயாளிகள்,பயணிகள் நோன்பை விட்டால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ? பதில் அளிக்க

உம்ரா செய்யும் முறை


உம்ரா செய்வது ஹஜ்ஜை நிறைவேற்றுவது போல் கடமை இல்லாவிட்டாலும் சிறந்ததாகவும் அதிக நன்மை பெற்றுத்தரக் கூடிய காரியமாகவும் இருக்கிறது. ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்.(அல் குர்ஆன் 2:196)

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

உளூவின் சட்டங்கள்


உளூச் செய்யும் போது முதல் செய்ய வேண்டிய செயல் இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுவதாகும். '... 'நீ உளூச் செய்யும் போது இரு முன் கைகளையும் கழுவி தூய்மையாக்கினால் உனது சிறு பாவங்கள் விரல் நுனியிருந்து வெளியேறுகின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி),நூல்: நஸயீ 147)

இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்


மனித வாழ்க்கையில் கனவுகள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. நடக்க முடியாததை ஒருவன் எதிர்பார்க்கும் போது 'பகல் கனவு காணாதே' என்று கூறுவதும், சட்சிகள் இல்லாமல் நடைபெற்ற காரியத்தை பேசும் போது 'ஊமை கண்ட கனவு போல்' என்று உவமை கூறப்படுவதும் கனவுகளின் பாதிப்பை உணர்த்தப் போதுமானதாகும்.

நபிமார்கள் வரலாறு


நபிமார்கள் வரலாறு என்று நாம் எழுதும் இந்தத் தொடருக்கு ஆதாரமாக திருமறையையும் நபி மொழியையும் மாத்திரம் நாம் எடுத்துக் கொண்டதற்காண காரணம்.வரலாறுகளைப் பொருத்தவரை அதிலும் குறிப்பாக நபிமார்கள் வரலாறுகளைப் பொருத்தவரை பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முற்பட்ட வரலாறுகளும் உண்டு சில ஆண்டுகளுக்குற்பட்ட வரலாறுகளும் உண்டு.

திங்கள், 31 ஜனவரி, 2011

இம்மை,மறுமையில் வெற்றி பெற..(பெற்றோரை பேணுதல்)


Name(பெயர்)  : அதீன் Paris
Title(தலைப்பு)  : இம்மை,மறுமையில் வெற்றி பெற..

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)


என் அன்பிற்க்கினிய சகோதர, சகோதரிகளே..



"இஸ்லாம்" இறைவனின் மார்க்கம் "திருக்குர்ஆன்" இறைவனின் வேதம் தான் என்பதற்க்கும் திருமறை முழுவதும் நற் சான்றுகள் நிரம்பி உள்ளன. "அல்லாஹ்"வின் இறுதி தூதர் முஹம்மது"நபி(ஸல்..) அவர்கள் வாழ்ந்து காட்டிய உலக வாழ்க்கையின் வரலாற்று தொகுப்புகள்(ஹதீஸ்), மற்றும் திருக்குர்ஆன் முழுவதும், இவர் இறை துாதர் தான் என்று நற் சாட்சியம் பகர்கின்றன. இவ்விரண்டும் தான் நம் வாழ்க்கை நன் நெறியாகும். நாம் வாழும் சமூகத்தில் நம் கண் முன் நிகழும் உண்மை நிகழ்வுகள் பல... அதில் பெற்ற தாய், தந்தையரை பேணுபவரின் வாழ்க்கை தரத்தை சற்று கூர்ந்து கவனித்தால் பல பேர் மேம்பட்டவராகவே! இருப்பதை காண்கிறோம். இது "அல்லாஹ்" நமக்கு அளிக்கும் மறைவான அருள் ஆகும். இறைவனின் கூற்றையும், நபிகள் நாயகம்(ஸல்..) அவர்களின் சொல், செயல்,அங்கீகாரம், இவை அ னைத்தையும் கற்று, சற்று சிந்தித்து, செயல்பட்டால் நீங்களும் இம்மை, மறுமை இவ் விரண்டிலும் மேம்பட்டவரே!



சில எடுத்துக்காட்டுகள் இதோ!...




அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் , பெரும் கருணையாளன் எல்லாம் வல்ல "அல்லாஹ்" ரப்புல் ஆலமீன் ! தன் திருமறையில் கூறுகிறான்.



அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்.



திருக்குர்ஆன் 4:36



"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!" என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி " சீ " எனக்கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!



திருக்குர்ஆன் 17:23



அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! " சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!" என்று கேட்பீராக!



திருக்குர்ஆன் 17:24



மனிதனுக்கு அவனுடைய பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனுடைய தாய் பலவீனத்துக்கும் மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவர் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்.



திருக்குர்ஆன் 31:14



தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.



திருக்குர்ஆன் 46:15



எங்கள் தலைவர் முஹம்மதுநபி(ஸல்...) அவர்கள் நவின்ற பொன் மொழிகள் இதோ!...



"அல்லாஹ்வின் துாதரே! மனிதர்களிலேயே நான் தோழமை கொள்ள அதிக உரிமை படைத்தவர் யார்?" என்று நான் கேட்டேன். அதற்க்கு நபி(ஸல்) அவர்கள் "உன் தாய்" என்றார்கள். அடுத்ததாக யார் ? எனக்கேட்டேன். "உன் தாய்" என்றார்கள். அடுத்ததாக யார்? எனக்கேட்டேன். "உன் தாய் " என்றார்கள். அடுத்ததாக யார்? எனக்கேட்டேன். "உன் தந்தை " என்றார்கள்.



அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நுால்: புகாரி(5971)



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்னையரைப் புண்படுத்துவது, (அடுத்தவருக்குத் தர வேண்டியதை) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான்.



அறிவிப்பவர்: முஃகிரா பின் ஷூஅபா(ரலி) நுால்:புகாரி (5975)



நபி (ஸல்) அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றி கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்கு துன்பம் கொடுப்பதுமாகும் என்று கூறினார்கள்.



அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நுால்: புகாரி(2653)



"ஒரு மனிதர் தம் தாய் தந்தையரைச் சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்" என அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நுால்:புகாரி(5973)



நான் நபி( ஸல்) அவர்களிடம், "கண்ணியமும், மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்க்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?" என்று கேட்டேன். அவர்கள், " தொழுகையை அதற்குறிய நேரத்தில் நிறைவேற்றுவது " என்றார்கள். "பிறகு எது?" என்று கேட்டேன். "தாய்,தந்தையருக்கு நன்மை செய்வது" என்றார்கள்.



அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) நுால்: புகாரி(5970)



ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் துாதரே! பெரும் பாவங்கள் எவை என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் இறைவனுக்கு இணை கற்பிப்பது என்றார்கள். அவர் பிறகு எது என்றார். நபி(ஸல்) அவர்கள் பிறகு தாய் , தந்தையரைப்புண்படுத்துவது என்றார்கள். அவர் பிறகு எது எனக்கேட்க நபி(ஸல்) அவர்கள் பொய் சத்தியம் என்றார்கள். நான் பொய் சத்தியம் என்றால் என்ன? என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் பொய் சொல்லி ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைக் கைபற்றுவதற்காகச் சத்தியம் செய்வது என்றார்கள்.



அறிவிப்பவர்:-அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நுால்:- ஸஹீஹுல் புகாரி:-6920



இந்த நன் நெறிகளை கற்று, சிந்தித்து , செயல் படுத்தி "தவ்ஹீத்" கொள்கையை உயிர் மூச்சாக ஏற்று தடம் புரளாமல் என்றென்றும் நிலையான "ஏகத்துவம்", எத்தி வைத்து வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல் அருள் புரிந்து இவ்விரு உலகிலும் நன் மக்களாக ஆக்கி வைப்பானாக !



அல்ஹம்துலில்லாஹ்..

மையவாடிக்கு(கப்ருஸ்தான்) சென்றால் ஓதும் துஆ


Name(பெயர்)  : insaaf mohammed
Title(தலைப்பு)  : மையவாடிக்கு(கப்ருஸ்தான்) சென்றால் ஓதும் துஆ

மையவாடிக்கு(கப்ருஸ்தான்) சென்றால் ஓதும் துஆ 


ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் பொது மையவாடிக்கு சென்று 'அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஹ்மிநீன் . வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் 

லாஹிகூன் '(அடக்க தளங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே ! உங்கள் மீது இறை சாந்தி பொழியட்டும் .இறைவன் நாடினால் நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள் தாம்) என்று கூறினார்கள் . 

நூல் :ஸஹிஹ் முஸ்லிம் 419, அறிவிப்பாளர் : அபூஹுரைரா 

முஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி


Name(பெயர்)  : insaaf mohammed
Title(தலைப்பு)  : முஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி

"முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்'' என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை முதன்மைச் செயலர் அலாவுதீன் மகள் முஸ்பிரா மைமூனுக்கும், அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்மை மற்றும் இலக்கிய அணியைச் சேர்ந்த -ஹிதாயதுல்லா மகன் ரஷீத் அரபாத்துக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது.

இத்திருமண விழாவில் கலந்துகொண்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது:




"முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற ஹிதாயதுல்லாவின் கோரிக்கைகளை நான் வெளிப்படையாகச் சொல்வதற்கு முன் எனக்கென்று ஒரு அரசு இருக்கிறது. அந்த அரசில் சில அமைச்சர்கள் இருக்கிறோம். எல்லாரும் கலந்து பேசி அதற்கு பின் தான் இதை வெளியிட முடியும். அதுவரை பொறுமையாக இருங்கள்" என்று கூறினார்.

"ஹிதாயதுல்லாவின் பேச்சைக் கேட்ட போது, என்னை அழைத்தது மணவிழாவிற்கா அல்லது மாநாட்டிற்கா என புரியவில்லை. அவரது கோரிக்கைகள் கைகழுவப்படாமல் நிச்சயம் பரிசீலிக்கப்படும். அதற்கான மகிழ்ச்சியை அவர்கள் தெரிவிக்கும் நாள் விரைவிலே வரும்" என்று குறிப்பிட்ட முதல்வர் மேலும் பேசுகையில்,

நாளிதழ் செய்தி

திரு குர்ஆனுடன் மோதும் மவ்லிது வரிகள்


மவ்லிதுதமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான் மவ்லிதின் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் பலவருடங்களாக கூறிவருகிறோம். நம் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறுபவர்கள் நாம் தவறான அர்த்தம் அதற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தினர். எனவே சுப்ஹான மவ்லிதின் சரியான பொருளை அவர்களைச் சார்ந்த- மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் தேங்கை சர்புத்தீன் என்ற மவ்லவி எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பை எடுத்து எழுதியுள்ளோம். அதோடு அந்த மவ்லித் வாரிகளுக்கு எதிர் கருத்து கூறும் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டும் நாம் எடுத்தொழுதியுள்ளோம். அதில் நம் கருத்துக்களை சேர்க்கவில்லை. மவ்லித் ஓதினால் நன்மையுண்டு என்று எண்ணுபவர்கள் அதன் உண்மை நிலை இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

1
மவ்லித் வரிகள்

اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ        اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ

பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் !
கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !

اَنْتَ غَفَّارُ الْخَطَايَا           وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ

இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ,
அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ

كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ    وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!
சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!
குர்ஆன் வரிகள்
அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!” (அல்குர்ஆன் 3:193)



2
மவ்லித் வரிகள்

يَا مَنْ تَمَادى وَاجْتَرَمْ      تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ
وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ    وَنُوْرُهُ عَمَّ الْبِلاَدِ

பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்துவிட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக் கொள்!
நபியின் கொடைத்தன்மையை எதிர்பாத்துக் கொள்!
புனிதம் மிக்க ஹரம் ஷரீபின் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக் கொள். அவர்களின் பேரொளி அனைத்து நாடுகளையும் பொதுவாகச் சூழ்ந்து கொண்டது.
குர்ஆன் வரிகள்
அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்றமாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 72 : 22)
அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 3 : 135)
3
மவ்லித் வரிகள்

حُبُّكُمْ فِيْ قَلْبِنَا مَحْوٌ   مِنْ رَّئِيْنَ الذَّنْبِ وَالْحَرَجِ
صَبُّكُمْ وَاللهِ لَمْ يَخِبِ   لِكَمَالِ الْحُسَنِ وَالْبَهَجِ

தங்களின்பால் நாங்கள் வைத்திருக்கும் நேசம் எங்களின் இதயத்திலிருக்கிறது.
இது எங்களின் பாவக் கறைகளிலிருந்தும் குற்றத்திலிருந்தும் உள்ளவற்றை அழித்துவிடும்.
தங்களின் நேசன் முழுமையான அழகையும் ஒளியையும் பெறுகிற காரணத்தால் அல்லாஹ் மீது சத்தியமாக!
அவர் இழப்பினை அடையவில்லை.
குர்ஆன் வரிகள்
அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 5:74)
4
மவ்லித் வரிகள்

اَنِّيْ عُبَيْدٌ ذَلِيْلٌ     مِنْ عَثْرَتِيْ اَسْتَقِيْلُ
وَمَا يَخِيْبُ النَّزِيْلُ     فِيْ حَيِّ رَاعِ الذَّمَامِ

நிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கிவிடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின் குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார்.
குர்ஆன் வரிகள்
நான் உங்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! நீர்) கூறுவீராக! (அல்குர்ஆன் 72:21)
அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் (முஹம்மதே!) அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 5:41)

5
மவ்லித் வரிகள்

اَلشَّافِعُ الْمُنْقِذِ مِنْ مَهَالِكِ    وَآلِهِ وَصَحْبِهِ وَمَنْ هُدِيَ

அழிவுகளிலிருந்து காப்பாற்றுகிறவரும் மன்றாடுகிறவருமான நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நேர்வழியாக்கப்பட்டவர்கள் மீதும் ஸலாவத்துச் சொல்லுங்கள்.
குர்ஆன் வரிகள்
“மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?” என்று (முஹம்மதே!) நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவை களின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 5:17)
6
மவ்லித் வரிகள்

صَلَوَاتُ اللهِ عَلى الْمَهْدِيْ        وَمُغِيْثُ النَّاسِ مِنَ الْوَهَجِ

வழிகாட்டப்பட்டவரும் வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவோருமான நபி(ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக.
குர்ஆன் வரிகள்
“எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (அல்குர்ஆன் 2:201)
“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)

7
மவ்லித் வரிகள்

اِنِّيْ اِذَا مَسَنِّيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ     اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ

எனை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்.
குர்ஆன் வரிகள்
அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 3 : 160)
“அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்” என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். (அல்குர்ஆன் 7 : 128)

8
மவ்லித் வரிகள்

اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ

மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்
குர்ஆன் வரிகள்
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2:107)
8
மவ்லித் வரிகள்

ضَاقَتْ بِيَ اْلاَسْبَابْ      فَجِئْتُ هذَا الْبَابْ
اُقَبِّلُ اْلاَعْتَابْ        اَبْغِيْ رِضَا اْلاَحْبَابْ
وَالسَّادَةُ اْلاَخْيَارِ

எனக்கு காரணங்கள்(உபாயங்கள்) நெருக்கடியாகிவிட்டன. எனவே நபியே! தங்களின் இந்த வாசலுக்கு நான் வந்து விட்டேன். தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன். நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தை தேடுகிறேன்.
குர்ஆன் வரிகள்
(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்! (அல்குர்ஆன் 27:62)
9
மவ்லித் வரிகள்

فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ    عِنَايَةً مِنْ فَضْلِكُمْ مُعْتَمَدِيْ

எனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக. என்னால் பற்றி நிற்கப்படுவதற்குரிய நபியே தங்களின் அருட்கொடையிலிருந்து நான் நாடுகிறேன்.
குர்ஆன் வரிகள்
“இதிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்; என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:64)
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.(அல்குர்ஆன் 13:28)
10
மவ்லித் வரிகள்

قَدْ فُقْتُمُ الْخَلْقَ بِحُسْنِ الْخُلُقِ       فَاَنْجِدُوا الْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ

அழகிய நற்குணங்களின் மூலமாகத் தாங்கள் நிச்சயமாக படைப்பினங்களை விட மேம்பட்டு விட்டீர்கள். எனவே யான் கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையைக் காப்பாற்றுங்கள்.
குர்ஆன் வரிகள்
“அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:56)
11
மவ்லித் வரிகள்

بَسَطْتُ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ      اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ

என் வறுமை என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்துவிட்டேன். ஆகவே யான் தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்.
குர்ஆன் வரிகள்
“எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:86)

நபி மொழி
நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ 2440)
12
மவ்லித் வரிகள்

وَانْظُرْ بِعَيْنِ الرِّضَالِيْ دَائِمًا اَبَدًا

கருணைமிகும் மாநபியே! காலமெல்லாம் நித்தியமாய் திருப்தியெனும் விழிகளினால் தேம்புமெனைப் பார்த்தருள்வீர்.
குர்ஆன் வரிகள்
அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:72)
அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 9 : 109)

13
மவ்லித் வரிகள்

وَاعْطِفْ عَلَىَّ بِعَفْوِ مِنْكَ يَشْمَلُنِيْ        فَاِنَّنِيْ عَنْكَ يَا مَوْلاَيَ لَمْ اَحِدِ

என்னெஜமான் ஆனவரே, ஏற்றமிகு நுமைத்தவிர அன்னியரை நிச்சயமாய் அழையேனே! ஆதலினால் மன்னவரே! தங்களுயர் மன்னிக்கும் அரிய பண்பால் என்னிடத்தில் கழிவிரக்கம் என்றென்றும் காட்டிடுவீர்.
குர்ஆன் வரிகள்
அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)
உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன்”(என்றார்.) (அல்குர்ஆன் 11 : 90)

14
மவ்லித் வரிகள்

إِنَّا نَسْتَجِيْرُ فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ

நிச்சயமாக நாம் ஒவ்வொரு தண்டனையையும் தடுத்திடும் விஷயத்தில் இவர்களிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்.
குர்ஆன் வரிகள்
தீமைகளைச் செய்தோரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு தீமைக்கு அது போன்றதே தண்டனை. அவர்களை இழிவும் சூழ்ந்து கொள்ளும். இருள் சூழ்ந்த இரவின் ஒரு பகுதியால் அவர்களின் முகங்கள் மூடப்பட்டது போல் இருக்கும். அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் (அல்குர்ஆன் 10 : 27)
மவ்லித் வரிகள் நபியே! தங்களைக் கொண்டு யான் உதவி பெறுவதில் தங்களின் மீது சத்தியம் செய்கிறேன்.

நபி மொழிகள்
அல்லாஹ் அல்லாவதர்களைக் கொண்டு சத்தியம் செய்வர் இணைவைத்துவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : அபூதாவூத் 2829)
சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்! இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ 2679)
15
மவ்லித் வரிகள்

اَنْتَ سَتَّارُ الْمَسَاوِيْ     وَمُقِيْلُ الْعَثَرَاتِ

எம்மில் நிகழும் தீங்குகளை இதமாய் மறைப்பவர் தாங்களன்றோ, நிம்மதி குலைக்கும் இன்னல்களை நீக்கிவிடுபவர் தாங்களன்றோ.

اَلسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ

நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்.

يَا مَنْ يَّرُوْمُ النَّعِيْمَا      بِحُبِّهِ كُنْ مُقِيْمًا

وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا      لَدَيْهِ بُرْعُ  السَّقَامِ

நயீம் எனும் சுவனத்தை நாடுபவனே! நபியவர்களின் நேசத்தைப் பற்றிக் கொண்டு தங்குபவனாக நீ இரு. நீ நோயாளியாக இருந்தால் நபி(ஸல்) அவர்களிடம் நோயின் நிவாரணம் இருக்கிறது.
குர்ஆன் வரிகள்
நான் நோயுறும் போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)
நபி மொழி
மனிதர்களைப் படைத்து பராமரிப்பவனே! நோயைப் போக்கி, அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (நூல் : புகாரீ 5675)
16
மவ்லித் வரிகள்

مُسْتَشْفِعًا نَزِيْلَ هذَا الْحَرَمِ       فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ

மதீனாவெனும் இந்த மகத்தான பூமியில் இறங்கிய மாநபியே! தங்களின் பரிந்துரையைத் தேடியவனாக தங்கள் முன் நிற்கிறேன். எனவே, நிரந்தர நல்லுதவி செய்வதின் மூலமாக என்பால் கடைக்கண் பார்வையைச் செலுத்துவீர்களாக.
குர்ஆன் வரிகள்
“அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும், விளங்காதும் இருந்தாலுமா?” என்று கேட்பீராக! “பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே” என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 39:43,44) மிகைத்தவனும், ஞானமிக்கோனுமான அல்லாஹ்விடமிருந்தே தவிர எந்த உதவியும் இல்லை. (அல்குர்ஆன் 3:126)
17
மவ்லித் வரிகள்

اَنْتَ مُنْجِيْنَا مِنَ الْحُرَقِ           مِنْ لَهِيْبِ النَّارِ وَاْلاَجَجِ
ذَنْبُنَا مَاحِيْ لَيْمَنَعُنَا        مِنْ ذُرُوْفِ الدَّمَعِ وَالْعَجَجِ

நரக நெருப்பின் ஜவாலையினாலும் அதன் கடும் வெப்பத்தினாலும் கரிந்து போகாமல் எங்களை காப்பாற்றுவது தாங்களே ஆவீர்! எங்களின் பாவங்கள் அழிப்பவரே! தாங்கள் பாவங்களை அழிப்பது எங்களை கண்ணீர் வடிப்பதிலிருந்தும், கதறுவதிலிருந்தும் தடுத்துவிடும். நபியே! தங்களின் பரந்த மனப்பான்மையினால் கரிக்கும் நரக நெருப்பின் கொழுந்து விட்டெரியும் ஜவாலையை அணைத்து விடுங்கள். தங்களின் இரக்கத் தன்மையால் என் ஈரலின் வெப்பத்தைக் குளிரச் செய்யுங்கள்.
குர்ஆன் வரிகள்
யாருக்கு எதிராக வேதனை பற்றிய கட்டளை உறுதியாகி விட்டதோ அவனா? (சொர்க்கம் செல்வான்?). நரகத்தில் உள்ளவனை நீர் விடுவிப்பீரா? (அல்குர்ஆன் 39:19)
“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)